ஓம் அம்மா
வணக்கம்
என்னுரை
என் எண்மின் தோட்டத்திற்கு வரவேற்கிறேன். என் பெயர் அன்பு. நான் மாதா அம்ருதானந்தமயி தேவியின் மாணாக்கன். நான் அம்ருதா விஸ்வ வித்யாபீடம், அம்ருதபுரியில் கணினிப்பொறி அறிவியல் பயிலும், மூன்றாம் ஆண்டுக் கல்லூரி மாணவன்.
இந்த தளம் பற்றி
இது ஒரு எண்மின் தோட்டம். தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழர் வாழ்வியல் (ஆன்மிகம்), மெய்யியல், தொழில்நுட்பம், லினெஷ், வியத்தகு பாடல் வரிகள், ஒளிப்படவியல், நான் கற்றது, கல்லாதது, அறிந்தது, அறியாதது என எனக்குத் தோன்றும் அனைத்தையும் இந்த தளத்தில் முதன்மையாக தமிழிலும் அதன் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்திலும் பதிவிடவுள்ளேன்.
தளத்தின் மொழி பற்றி
இந்த தளத்தை முழுக்க முழுக்க தமிழில் எழுத வேண்டும் என்பது எனது குறிக்கோள். தமிழ் என்று சொன்னால், ஆங்கிலம் மற்றும் வடமொழி (பிராகிருதம், சமஸ்கிருதம்) கலக்காத தூய, செம்மையான தமிழைக் குறிக்கிறேன். ஆகையால் வாசகராகிய நீர் தமிழர் என்றால், தமிழை விட ஆங்கிலத்தில் வசிப்பது உமக்கு எளிமையாக இருப்பினும், தயவு கூர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தாமல் தமிழிலேயே வாசிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
முடிந்தவரை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பிழைகளை திருத்திய பின்னரே பதிவிடவுள்ளேன். இருப்பினும் தமிழ் இலக்கணத்தை சரிபார்ப்பதில் செ.நு இன் மீது எனக்கு முழு நம்பிக்கை இல்லை. ஆகையால், நீர் வாசிக்கையில் ஏதேனும் பிழைகள் உங்கள் கண்ணில் பட்டால், அப்பிழையைச் சுட்டிக்காட்டி, சரியான தமிழ் இலக்கணச் சான்றுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் பிழைகளை திருத்துவது மட்டுமன்றி உங்களின் பங்களிப்பை இத்தளத்தில் பதிவிடுவேன்.
தொடர்புக்கு
மின்னஞ்சல் · படவரிஇந்த எண்மின் தோட்டம் என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
அடிக்கடி வந்து பாருங்கள்!